அதிரை தக்வா பள்ளி மார்க்கெட் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு

Editorial
0

அதிரையின் பழமையான மசூதிகளில் ஒன்றான தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் இப்பகுதியின் பிரதான சந்தையாக இருந்துவந்தது. ஆனால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து அகற்றப்படாமல் பள்ளிக்கு முறையாக வாடகையும் செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் மார்க்கெட் பொழிவிழந்து பொதுமக்களின் வருகையும் வெகுவாக குறைந்தது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த மார்க்கெட் கடைகளில் இருந்து பள்ளி நிர்வாகத்துக்கும் உரிய வருவாய் கிடைக்காமல் இருந்தது. 

Advertisement:

Contact: 9994887248


குறிப்பாக மீன்மார்கெட் செல்லும் சாலை முறையான  வசதியில்லாமல் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் குறையாக இருந்தது. இது தொடர்பாக அதிராம்பட்டினம் நகர் பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தில் கேட்டுக் கொண்டதற்கு இனங்க மார்க்கெட் முழுவதும் பொதுமக்கள் செல்லும் இடமெல்லாம் முறையான சாலை வசதிகளையும், மின்சாரம், மற்றும் தண்ணீர் வடிகால் வசதிகளை நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முக்கிய பிரச்சனையாக இருந்த மார்க்கெட் ஆக்கிரமிப்பு தொடர்பாக பள்ளி நிர்வாக கமிட்டியின் தலைவர் எம்.எஸ்.ஷிஹாபுதீன் மற்றும் செயலாளர் எஸ்.முஹம்மது ஜெமில், சக உறுப்பினர்கள் ஆக்கிரமிப்பாளரகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வக்ப் நிலம் மீட்கப்பட்டுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...