2 ஆம் நம்பர் வேலை அதிகரித்து இளைஞர்களை சீரழித்து வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார மோசடி கும்பலின் தொடர்புகளைப் பெற்று இவர்களும் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் கடத்தல் குற்றங்களால் சாதாரண இஸ்லாமிய ஆண், பெண் பயணிகளையும் விமான நிலையங்களில் சந்தேகக்கண் கொண்டு அதிகாரிகள் பார்க்கின்றனர். சோதிக்கின்றனர்.
வெளிநாட்டை விடுங்கள்.. சென்னையில் இருந்து கூட நம்பி ஒரு பார்சல் கூட வாங்கிச் செல்ல முடியவில்லை. நண்பர், உறவினர் என்று நம்பினால், நம்மிடமே நமக்குத் தெரியாமலேயே கடத்தல் பொருளை கொடுத்துவிடுகிறார்கள்.
முஸ்லிம்களில் பலர் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். தினமும் முஸ்லிம் இளைஞர்களின் பெயர், புகைப்படங்கள் பொருளாதார குற்றவாளிகள் என்ற பட்டத்துடன் செய்திகளில் வருகின்றன. ஹவாலா, ஊனாவில் சிக்கியவர் மீது பயங்கரவாத வழக்கு கூட தொடர முடியும். அவரது வாக்குமூலத்தின் மூலம் ஊனாவில் பணம் அனுப்பி வைப்பவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து அவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் உண்டு. வங்கி ஸ்டேட்மென்ட் முழுமையாக இல்லாமல் ஹவாலா மூலம் பணம் அனுப்பி நீங்கள் சேர்த்த சொத்துக்களை முடக்கவும் கைப்பற்றவும் சட்டம் வழிவகை செய்கிறது.
Contact: 9994887248
ஆனால், இங்கு அது ஹலாலா ஹராமா என்ற விவாதத்துடன் முடிந்துவிடுகிறது. படித்து முடித்து வேலைத்தேடும் இளைஞர்களை குறிவைத்து இந்த 2 ஆம் நம்பர் மாபியா கும்பல் காய் நகர்த்தி பண ஆசைக் காட்டி அவர்களை குருவிகளாக, கடத்தல்காரர்களாக மாற்றி வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. இந்தியன் வங்கி- மாஸ்டர் கார்டு மோசடி விவகாரத்தில் நமதூர் அப்பாவி பெண்கள், இளைஞர்களை சிக்க வைத்து ஏமாற்றியதும் இந்த இரண்டாம் நம்பர் கும்பல்தான்.
இதில் உயிருக்கே ஆபத்தாக முடியும் செம்மரக் கடத்தலிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். இஸ்லாம், அரசியல், சமூக சேவை என்று கூறிக்கொண்டு இத்தகைய கீழ்தரமான காரியங்களில் ஈடுபடுபவர்கள், ஆள் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஊருக்கு வரும்போது உத்தமர் வேடம்போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.
லட்சங்களைக் கொட்டிக்கொடுத்து பிள்ளைகளைப் படிக்க வைத்தது திருட்டுத்தனமாக கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்குதானா? தங்க கடத்தல் என்று தொடங்கிய நமதூரை சேர்ந்த சிலர் போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வெளிநாட்டில் சிக்கி ஊர் மானத்தையும் சமுதாயத்தின் பெயரையும் கெடுத்துவிட்டார்கள்.
அதிரை மக்களும், உலமாக்களும், ஜமாத்துகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்தி அதில் ஈடுபடுவதில் இருந்து மக்களை தடுக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ளவர்களும் உங்கள் ஊதியத்தை இந்திய சட்ட விதிகளின்படி ஊருக்கு அனுப்பி வைத்திடுங்கள். அதுதான் நாட்டிற்கும் நல்லது. எதிர்காலத்தில் உங்களுக்கும் நல்லது.