அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா

Editorial
0

இன்று 26-01-2025 ஞாயிற்று கிழமை காலை சரியாக 07:30 மணிக்கு நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நுழைவாயில் முகப்பு கொடி மேடையில் 76வது குடியரசு தின கொடியேற்றும் நிகழ்வு சிறப்புடனே நடைபெற்றது. நிறைவில், சங்கத்தின் பொருளாளர் சகோதரர் A.ரஃபீக் அஹமது அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கி நிகழ்வை சிறப்பானதாக்கப்பட்டது.

கண்ணியமிக்க முஹல்லா மூத்தோர் பங்கெடுக்கும் நிகழ்வில் மு.செ.மு.முஹம்மது இபுராஹிம் அவர்களால் 76வது குடியரசு தினம் கொடியேற்றி வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் நமது பாரம்பரியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைவர் அவர்கள் முந்நிலை வகிக்க கண்ணியத்துக்குரிய மவுலான அப்துல் ஹாதி பாகவி முஃப்தி அவர்களின் சிறப்புறையும் இடம் பெற்றது.

முன்னதாக மக்தப் மதர்ஸா மாணாக்கர்களின் சிறப்பான அணிவகுப்பு நடைபெற்றது, முதலில் இன்றைய நிகழ்வில் கிராத்  ஹாஃபிழ் முஹம்மது உமர் அவர்கள் ஓத தொடர்ந்து சகோதரர் முஹம்மது சலீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார்கள். அடுத்ததாக, சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள், பண்டைய பண்டமாற்று வியாபரம் தமிழர் அரேபியர் வர்த்தகம், பழமையான நாகரீகம் பற்றியதொரு அழகான சிறு தொப்புரையை வழங்கினார்கள்.

Advertisement:

அன்றே அரேபியாவிலிருந்து பேரித்தம் பழம் கொடுத்து தமிழர்களான நம்மிடம் இரும்பு வாங்கிச் சென்று உருக்கிய வரலாற்றுத் தொடர்புகள் பற்றியும் சுவைபட சொன்னார்கள், ‘பழைய இரும்பு, ஈயம் பித்தாலை, தகரத்துக்கு பேரிச்சம் பழம்’ என்று தெரு வழி வியாபார சத்தங்களையும் நினைவூட்டி சுட்டிக்காட்டினார்கள்.

சிறப்பு பேச்சாளராக மவுலான அப்துல் ஹாதி பாகவி முஃப்தி அவர்கள் முஸ்லீம்களின் தியாகம், சுதந்திர  போராட்ட சூழல்களில் நம் பங்களிப்பு, ஆட்சி அதிகார கட்டமைப்பு, பிற இன மத மக்களோடான இணக்கம், நமது சகிப்புத் தன்மைகள் பற்றி சுருக்கமாக அற்புதமான உரையை நிகழ்தினார்கள்.

இன்றைய நிகழ்வின் சிறப்பம்சமாக ‘சமீபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற பெண்களுக்கான ‘வாழ்வியல் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பெண்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது, அதில் திறன் வாய்ந்த சமூக பொறுப்புடன் தன்னார்வகளாக செயல்பட்ட நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி மாணவிகளுக்கு அவர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.








Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...