அதிரையர்களை ஜித்தாவில் திரள வைத்த அய்டா ஒன்றுகூடல்.. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வென்ற குட்டீஸ்!

Editorial
0



சவூதி அரேபியாவின் ஜித்தாவில் இயங்கி வரும் அய்டா அமைப்பின் ஒன்றுகூடல் ஜித்தா மாநகரின் மிக சிறப்பாக நடைபெற்றது. காலை உணவுடன் தொடங்கிய இந்நிகழ்வு நமதூர் மக்களுக்கே உரித்தான மக்ரிப் தேனீர் வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வில் புதிதாக  ஆர்வத்துடன் நிறைய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Advertisement:

Contact: 9994887248


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி கலந்து கொண்ட  அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி அனைவரின் உள்ளங்களையும் குளிர வைத்தனர் நிர்வாகிகள். ஆண்களுக்கு சளைத்தவர் அல்ல பெண்கள் என்று மிக நேர்த்தியாக ஒவ்வொரு போட்டிகளையும் பெண் தன்னார்வலர்கள் முன்னின்று சிறப்பாக கையாண்டு நடத்திக்கொடுத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...