அதிரையில் MLM மோசடி தொடர்பாக அதிரை பிறை நேற்று வெளியிட்ட செய்தியுடன் மௌலவி ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களைத் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பப்படுகிறது. இதற்கும் ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்கள் மீது அதிரை பிறை பெரும் மரியாதை வைத்து அவர்களின் ரமலான் சிறப்பு சொற்பொழிவை நேரடி ஒளிபரப்பு செய்தது. அதிரையில் பல ஆண்டுகளாக மார்க்கப் பணி செய்து ஷிர்க், பித்அத் ஒழிப்பில் மிக முக்கிய பங்காற்றியதில் ஹஜ்ரத் அவர்களுக்கு முக்கிய பொறுப்புண்டு. உலமாக்களின் கண்ணியத்தை கெடுக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் அதிரை பிறைக்கு இல்லை. அவர்களின் உரிமைக்காகவும் அதிரை பிறை குரல் கொடுத்துள்ளது.
ஒரு முறைகேடு தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதில் ஈடுபட்ட நபரை பூடகமாக வெளிப்படுத்த “பிரபல ஜும்மா பள்ளி”, “வெளியூர்”, “மதர்சாவில் ஆசிரியர்” என்று குறிப்பிட்ட வார்த்தைகள் தவறான புரிந்துணர்வை எற்படுத்தி, அது ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களுக்கு எதிராக திருப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு நாங்களும் காரணமாக இருப்பதை நினைத்து வருந்துகிறோம். வெளியூர் என்று நாம் குறிப்பிட்டது அந்நியப்படுத்தவோ, பிரிவினையை ஏற்படுத்தவோ அல்ல. இருப்பினும் அந்த வார்த்தை அத்தகைய எண்ணத்தை தூண்டும் வகையில் அமைந்திருப்பதால் இனி அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டோம். இனி இதுபோன்ற தவறு நடைபெறாத வகையில் செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம்.