அதிரை வண்டிப்பேட்டை வாகனங்கள் அதிகளவில் சென்று போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியில் அவ்வப்போது வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆலடிக்குளம் அருகே இன்று இரவு திடீரென ராட்சத அளவில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த வேகத்தடை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் அமைக்கப்பட்ட இந்த வேகத்தடை தொடர்பாக சாலையில் எந்த எச்சரிக்கை பலகையோ, குறிப்போ, ஒளிரும் ஸ்டிக்கர்களோ வைக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகத்தடை மீது ஏறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் அங்கு வந்தனர். ராட்சத அளவில் முன்னறிவிப்பின்றி இங்கு வேகத்தடை அமைக்கபட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த வேகத்தடை அங்கிருந்து அகற்றப்பட்டது. முன்னறிப்பின்றி அமைக்கப்பட்ட வேகத்தடை காரணமாக ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது.