அதிரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நமதூர் இமாம் ஷாபி பள்ளியில் நாளை டிசம்பர் 31ஆம் தேதி காலை 06.15 மணிக்கு தொடங்க உள்ளது. 50 வருட பாரம்பரியம் மிக்க இப்பள்ளியின் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன.
20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் முதல் பிரிவாகவும் 21லிருந்து 44 வயதிற்குட்பட்டோர் 2வது பிரிவாகவும் 10km மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். 45 வயதிலிருந்து 59 வயதிற்கு உட்பட்டவர்கள் முதல் பிரிவாகவும் இரண்டாவது பிரிவாக 60 வயதிற்கு மேற்பட்டோர் 5km வாக்கத்தான் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு முதல்முறையாக அதிரையை சேர்ந்த போட்டியாளர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிரை இமாம் ஷாபி பள்ளி அருகே இந்த மாரத்தான் போட்டி தொடங்குகிறது. தஞ்சாவூர் சரகம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் அவர்கள் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.
முன்னதாக மாரத்தான் போட்டிக்கு முன் பதிவு செய்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச இரத்தப் பரிசோதனை முகாம் மற்றும் மாரத்தான் டி சர்ட் வழங்கும் நிகழ்வு நேற்று அதிரை அர்டா வளாகத்தில் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள், ஷிபா மருத்துவமனை நிர்வாகிகள், இமாம் ஷாபி பள்ளி நிர்வாகிகள், அர்டா நிர்வாகிகள் கலந்துகொண்டு மரங்களை நட்டனர். வனத்துறை சார்பில் இலவசமாக மரங்கள் வழங்கப்பட்டன.