அதிரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நமதூர் இமாம் ஷாபி பள்ளியில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி காலை 06.15 மணிக்கு தொடங்க உள்ளது. 50 வருட பாரம்பரியம் மிக்க இமாம் ஷாபி பள்ளியின் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன.
20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் முதல் பிரிவாகவும் 21லிருந்து 44 வயதிற்குட்பட்டோர் 2வது பிரிவாகவும் 10km மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
அடுத்ததாக 45 வயதிலிருந்து 59 வயதிற்கு உட்பட்டவர்கள் முதல் பிரிவாகவும் இரண்டாவது பிரிவாக 60 வயதிற்கு மேற்பட்டோர் 5km வாக்கத்தான் போட்டியில் பங்கேற்கலாம்.
மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் வெற்றி பெரும் முதல் மூன்று நபர்களுக்கு முதல் பரிசு 10,000 ரூபாயும் இரண்டாம் பரிசு 6,000 மூன்றாவது பரிசாக 4,000 ரூபாயும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு முதல்முறையாக அதிரையை சேர்ந்த போட்டியாளர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ₹5000, ₹3000, ₹2000 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.