அதிரையில் தனித்தீவாக மாறிய சாணாவயல்.. ஒவ்வொரு ஆண்டும் வேதனை! கண்டுகொள்ளுமா அரசு?

Editorial
0
Ads: Crescent builders

மேலத்தெரு சாணாவயல் பகுதியில் உள்ள பாத்திமா பள்ளி செல்லும் சாலை தான் இது. இந்த சாலை அமைத்து 15 ஆண்டுகளாகிவிட்டதாகவும், இதுவரையும் இந்த சாலையை புதுப்பித்து தரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வீடு தேடி வந்து வாக்குகள் சேகரிக்கும் இவர்கள் தற்போது அங்கு சென்று நிலைமையை சற்று நேரம் ஒதுக்கி பார்வையிட்டால் மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று புரியும். ஏரியைபோல்  காட்சி அளிக்கும் இந்த சாலையில் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீர், மழை நீருடன் கலந்து தெருவை சூழ்ந்துள்ளது.

இதனால் கொசுத் தொல்லை அதிகரித்து காய்ச்சல், இருமல், தோல் வியாதிகள் என பல தூரங்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர். தனித்தீவாக காட்சியளிக்கும் இப்பகுதி வழியாக ஆட்டோ, வேன், கார் என எதுவும் மழை நேரத்தில் வருவதற்கு தயங்குகிறார்கள். இவ்வழியாக ஜனாசா கூட கொண்டுபோக முடுயாத நிலையில் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் தரமான புதிய சாலை அமைத்து, வடிகால் வசதி அமைத்து தரவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...