அமெரிக்க அதிரையர் மன்றத்தின் (AAF) புதிய நிர்வாகிகள் தேர்வு.. கலிபோர்னியாவில் திரண்ட தாயபுள்ளைகள்

Editorial
0

அமெரிக்க அதிரையர் மன்றத்தின் (AAF) குளிர்காலக் கூட்டம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கலிஃபோர்னியா மாகாணம் வல்லேஹோ நகரிலுள்ள இஸ்லாமிய மையத்தில் நடைபெற்றது.

ளுஹர் தொழுகைக்குப் பின் சுவையான உணவு வழங்கப்பட்டுப் பின்னர் கூட்டம் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டு கால AAF செயல்பாடுகளை தலைவர் சலீம், செயலாளர் நஜ்முத்தீன், துணைத் தலைவர் பரகத் மற்றும் இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் விளக்கினர். நிதி நிலையை பொருளாளர் அப்துர் ரவூஃப் வாசித்தார். பின்னர் உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பதில் அளிக்கப்பட்டன.


அஸர் தொழுகைக்குப் பின் மீண்டும் கூடிய கூட்டத்தில் 2025 - 26ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகக் குழுவுக்கு நடத்தப்பட்ட தேர்தல் பற்றி தேர்தல் ஆணையர்களில் ஒருவராகச் செயல்பட்ட சகோ. ஷிப்லி கூறி, தேர்தல் முடிவுகளை அறிவித்தார். 2024 தேர்தல் ஆணையர்களாக சகோ. ஷேக் தாவூத் (டெக்சாஸ்) மற்றும் சகோ. ஷிப்லி ஆகியோர் செயல்பட்டனர்.


பின்வரும் உறுப்பினர்கள் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தலைவர் : ஷேக் அப்துல் காதர் (Freemont)

துணைத் தலைவர்: அஹ்மது ஜப்ரீன் (Vallejo)

பொருளாளர்: அஹ்மது அமீன் (Freemont)

செயலாளர்: அப்துல் கரீம் (Sacramento)

இணைச் செயலாளர் : அஹ்மது அமீன் (Fairfield)


கஃப்பாராவுடன் கூட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. பின்னர் AAF சார்பாக தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் அதிரை நலன் சார்ந்து வழங்கப்பட்ட கோரிக்கை மனு தொடர்பாக மேற்கொள்ளப்பட நடவடிக்கை குறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அவர்களிடம் கேட்டறியப்பட்டது.


 G

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...