Ads: Crescent builders

அதிரை ஈசிஆர் சாலை பிஸ்மி மெடிக்கல் அருகே சற்றுமுன் விபத்து ஏற்பட்டுள்ளது. 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. சாலையோரக் கடைகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .