தீபாவளி விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதற்காக பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பட்டுக்கோட்டையிலோ அதிரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் கூட இன்று காலை முதல் இயக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 மணி நேரமாக சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த அதிரையர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் பேருந்து நிலையதில் காத்துக்கிடக்கின்றனர்.
இதற்கிடையே மழையும் பெய்ததால் கூடுதல் சிரமங்களை சந்தித்தனர். “தீபாவளி சிறப்புப் பேருந்தாக அதிரை பேருந்துகளையும் அனுப்பிவிட்டார்களோ… பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டிலேயே தீபாவளி முடிந்துவிடுமோ..” என்று புலம்புகின்றனர் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட அதிரை வந்த சென்னை வாசிகள்.