அதிரையில் அன்னதானம் என்ற பெயரில் ஏழைகளை திட்டி அவமானப்படுத்திய ''சிங்க" சங்கத்தினர்

Editorial
0
Ads: Crescent builders
அதிரையில் உண்மையாக சமூக சேவை செய்பவர்களை விட போலியாக விளம்பரத்துக்காக, புகைப்படம் வீடியோ எடுத்துக் கொள்வதற்காக, அரசியல் லாபத்திற்காக செயல்படுபவர்களே பெரிதும் கொண்டாடப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான அதிரை மக்கள் வலது கையில் கொடுத்தது இடது கைக்கு தெரியாத அளவுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். 

ஆனால் சில என்ஜிஓக்கள் முழுக்க முழுக்க விளம்பரத்தையும், வேறு சில ஆதாயங்களையும் நோக்கமாகக் கொண்டு சமூக சேவை என்ற பெயரில் விளம்பரங்களை தேடி கொள்கின்றனர். அதிரையில் சமீபத்தில் சிங்கத்தை பெயராகக் கொண்ட பன்னாட்டு என்ஜிஓ  ஒருவர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதாக கூறி கேமராக்களை தயாராக வைத்துக் கொண்டு ஒரு நிகழ்வை நடத்தி முடித்துள்ளது. 

அந்த கேமராவே தற்போது அவர்களுக்கு எதிர்வினையாக திரும்பி இருக்கிறது. ஆம் அதில் பதிவான காட்சி பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அன்னதானம் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட ஏழைகளை உணவு வழங்கும் பொழுது அவமரியாதையாகவும் ஒருமையிலும் பேசி விரட்டும் காட்சிகள் அதில் பதிவாகி சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

அங்கிருந்த ஒரு சிலர் இவ்வாறு நடந்து கொள்ளும் பொழுது சுற்றி இருந்த அந்த சங்கத்தை சேர்ந்த மற்றவர்களும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை. இதை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த நபரும் ஏழைகளை நோக்கியே குரல் உயர்த்திப் பேசினார். ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் சுயமரியாதை அனைவருக்கும் சமமானதுதான். அப்படி இருக்க தங்களின் சுய விளம்பரத்துக்காக இந்த ஏழைகளை அன்னதானம் வழங்குவதாக கூறி சில ஆயிரங்களை செலவு செய்து விட்டு அவர்களின் விலைமதிப்பற்ற தன்மானத்தை பறிக்கும் வகையில் நடந்து கொண்டது தான் சமூக சேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பு: பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் சுயமரியாதை கருதி வீடியோ மற்றும் புகைப்படங்களை நாம் வெளியிடவில்லை.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...