Ads: Crescent builders
அந்த கடையை திமுக கிழக்கு நகர பொறுப்புக்குழு உறுப்பினர் முத்துராமன் (48) நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ. 25ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்துவிட்டு சென்றனர். அந்த அபராதத் தொகையை முத்துராமன் செலுத்தாத நிலையில், தற்போது மீண்டும் அந்த கடையில் காவல் ஆய்வாளர் முருகேசன், உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த குட்கா பாக்கெட்களை கைப்பற்றி கடையை இழுத்துபூட்டினர். ஏற்கனவே ரூ.25ஆயிரம் அபராத தொகை நிலுவையில் இருக்கும் நிலையில் மேலும் ரூ.50ஆயிரத்தை உணவு பாதுகாப்புத்துறையினர் அபராதமாக விதித்துள்ளனர். இதனையடுத்து குட்கா விற்பனை செய்த கடையின் உரிமையாளர் முத்துராமனை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின்போது உதவி காவல் ஆய்வாளர் மகாராஜா, உணவு பாதுகாப்புத்துறை உதவியாளர்கள் அடைக்கலராஜ், சுரேஷ், ஜான் ஆகியோர் உடனிருந்தனர். குட்காவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஆளும் திமுக அலுவலக வளாகத்தில் உள்ள கடையில் திமுக உறுப்பினரால் குட்கா விற்பனை செய்யப்பட்டு சிக்கி இருப்பது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.