Ads: Crescent builders
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், சம்சுல் இஸ்லாம் சங்க துணை தலைவர் சர்புதீன், செயலாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் உமர் பாரூக் வரவேற்புரையாற்றினார். மேலும் சிஸ்யா இளைஞர் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முகம்மது தம்பி பேரிடர் குறித்து பேசினார்.
இதனையடுத்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வீரர்கள் மாணவர்கள் மத்தியில் பேரிடர் கால பயிற்சி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். அப்போது மழை வெள்ளம் போன்ற சமயத்தில் வீட்டில் இருக்கும் வாட்டர் கேன், தண்ணீர் பாட்டில், காய்ந்த தேங்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எவ்வாறு நீந்தி கரை சேர்வது என்பது தொடர்பாகவும் விளக்கி கூறினர். மேலும் தீபாவளி பண்டிகையின்போது எவ்வாறு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும் பேசினர். இறுதியாக சமூக ஆர்வலர் முகம்மது சாலிஹ் நன்றி கூறினார்.