அதிரையில் ரயிலைவிட சிறிய பிளாட்பாரம்.. தஞ்சாவூர் எம்பியிடம் நேரில் மமக மனு

Editorial
0
Ads: Crescent builders
அதிரை ரயில் நிலையத்தின் நடைமேடை ரயிலின் நீளத்தைவிட குறுகியதாக இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக முதியோர் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள்

பயணிகள் இறங்கும் இடத்தில் கருவேலங்காடுகள் வளர்ந்து உள்ளன. இரவு நேரத்தில் பாம்பு நட்டுவாக்கிளி தேள் போன்ற விஷப் பிராணிகளால் இரயில் பிராணிகளுக்கு ஆபத்து ஏற்படலாம். இது தொடர்பாக அதிரை பிறையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.


இந்நிலையில் இன்று தஞ்சையின் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட  மற்றும் அதிரை நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து அதிராம்பட்டினம் ரயில்வே நடைமேடையை விரிவுபடுத்தி தருமாறு கோரிக்கை மனுவை அளித்தனர். இதனை ஏற்று  சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முரசொலி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...