அதிரை பிறை நேயர்களே.. வக்ஃப் சட்டத்திருத்ததுக்கு ஒரே கிளிக்கில் எளிதில் எதிர்ப்பு மெயில் அனுப்ப சிறப்பு வசதி

Editorial
0

Ads: Crescent builders
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு சென்றுள்ளது. இந்த கூட்டுக்குழு பொதுமக்களிடம் இது தொடர்பான கருத்துக்களை கேட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் பொதுமக்கள் மின்னஞ்சல் மூலமாக வக்ஃப் சட்ட திருத்த மசோதா தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம். இதற்கென மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை ஒரே கிளிக்கில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் தெரிவிக்க அதிரை பிறை சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. 

அதன்படி கீழே உள்ள SUBMIT என்ற சிவப்பு வண்ண பட்டனை கிளிக் செய்யவும். உடனே உங்கள் மெயில் பக்கம் திறக்கும். அதில் SEND பட்டனை அழுத்தினால் மட்டும் போதும். உங்கள் கருத்துக்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு சென்றடைந்து விடும். 



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...