Ads: Crescent builders
அதிராம்பட்டினத்தில் இருந்து செல்லும் ECR சாலையில் இருபுறமும் கருவேலஞ் செடிகள் முளைத்து சாலையில் ஆக்கிரமித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இதனால் லேசான வளைவுகளில் கூட எதிரில் வரும் வாகனங்கள், ஆட்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் நீண்டு கொண்டிருக்கும் இந்த கருவெலஞ்செடிகள் இரு சக்கர வாகன ஒட்டிகளின் முகத்தையே கிழித்து காயங்களை ஏற்படுத்திவிடுகிறது.
உடனடியாக சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள கருவேலஞ்செடிகளை அழித்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.