Ads: Crescent builders
அதிரை நகர திமுகவில் நகராட்சித் துணைத் தலைவர் குணசேகரன், முன்னாள் சேர்மன் அஸ்லம் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரை நகர திமுகவை இரண்டாக கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் கிழக்கு நகரத்தில் 3, 4, 5, 14, 15, 16, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய 13 வார்டுகள் அறிவிக்கப்பட்டு ராம குணசேகரன் அதிராம்பட்டினம் கிழக்கு நகர பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதிராம்பட்டினம் மேற்கு நகரத்தில் 1, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20 ஆகிய 14 வார்டுகள் பிரிக்கப்பட்டு அதிராம்பட்டினம் மேற்கு நகர பொறுப்பாளராக அஸ்லம் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு அதிக வாக்கு சதவீதத்தை அஸ்லம் தலைமையிலான மேற்கு அதிக வாக்கு சதவீதத்தை பெற்றது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை எம்.எல். ஏவும் திமுக மாவட்ட செயலாளருமான அண்ணாதுரை அஸ்லம் தரப்புக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு எதிராக குணசேகரன் தரப்பு திட்டம் தீட்டி இருக்கிறது.
இன்று இரவு இது தொடர்பாக குணசேகரன் தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை செய்துள்ளார். அதில் அண்ணாதுரையை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு திரளாக செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதே போன்று அதிரை வரவுள்ள எம்பி முரசொழியின் பயணத்தை தள்ளி வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் அலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக பட்டுக்கோட்டை திமுக வட்டாரத்தில் பரபரப்பான சுழல் நிலவுகிறது.