Ads: Crescent builders

அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் மின்சார வாரியம் எதிரில் கடந்த பல மாதங்களாக புதிய பள்ளிவாசல் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பலரும் அங்கு சென்று அதன் அழகிய கட்டிட அமைப்பை கண்டு வியந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் இந்த மசூதிக்கு ஆயிஷா என்று பெயர் வைக்கப்பட்டது. இதற்கிடையே வரும் ஜூலை 20 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் இந்த மசூதியின் திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.