அதிரை ரயில் வழித்தடத்தில் இன்றுமுதல் வாரத்தில் 7 நாட்களும் விரைவு ரயில் சேவை

Editorial
0
Ads: Crescent builders
மயிலாடுதுறை- காரைக்குடி வழித்தடத்தில் திருவாரூர் -காரைக்குடி இடையே அகல ரயில் பாதை தடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இன்று 21-06-2024 முதல் வாரத்தில் அனைத்து நாட்களும் விரைவு ர‌யி‌ல் சேவை இயங்கும் தடமாக செயல்பட உள்ளது.

இயங்கும் விரைவு ரயில் சேவைகள் :

ஞாயிறு: 
வண்டி எண் 16361 /16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ர‌யி‌ல்கள்.

திங்கள்: 
வண்டி எண் 06051/06052 தாம்பரம் - ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில்கள்.

* வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில்கள்.

செவ்வாய்:
* வண்டி எண் 16361 /16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ர‌யி‌ல்கள்

புதன்:
* வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில்கள்.

வியாழன்:
* வண்டி எண் 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

* வண்டி எண் 06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்.

வெள்ளி:
* வண்டி எண் 07696 ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

* வண்டி எண் 06069 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

* வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில்கள்.

சனி:
* வண்டி எண் 06051 /06052 தாம்பரம் - ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில்கள்.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ர‌யி‌ல்களும் சிறப்பு விரைவு ர‌யி‌ல்களும் நிரந்தர தினசரி சேவைகளாக இயக்கிட தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தடத்தில் உள்ள பயணிகள் ரயில் சேவைகளை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே அது விரைவில் சாத்தியமாகும். பல புதிய விரைவு ரயில் சேவைகளை வலியுறுத்தி பெற்றிட முடியும்.

- ஹாஜா முகைதீன்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...