அதிரை ரயில்நிலையத்தில் பயணிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்.. ஸ்டேசன் மாஸ்டர் மீது புகார்

Editorial
0

Ads: Crescent builders

அதிரை ரயில் நிலையத்தில் பணிபுரியும் வட மாநில அதிகாரி தமிழ் தெரியாமல் உடைமைகளை தொலைத்த தங்களுக்கு உதவ மறுத்ததாக பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் ரயிலில் புறப்பட்டு அதிரை வந்த பயணி தனது உடைமைகளை இழந்துள்ளார். அவருக்கு வடமாநில அதிகாரி உதவ மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், “எழும்பூர் திருநெல்வேலி ரயிலில் எங்களது சொந்த ஊருக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து வந்து கொண்டிருந்தோம். வருகின்ற வழியில் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை ரயில் தாண்டி சென்று கொண்டிருக்கும்போது தவறுதலாக எங்களுடைய உடைமைகள் உள்ள ஒரு பேக் ரயிலை விட்டு வெளியே விழுந்து விட்டது. அந்த உடைமையில் உள்ள பொருள்கள், எனது மடிக்கணினி மற்றும் கணக்கு வழக்கு புத்தகங்கள் மற்றும் பணம் ரூபாய் இருந்தது. இவை அனைத்தும் உள்ளடங்கிய பேக் ரயிலை விட்டு வெளியே தவறி விழுந்து விட்டது.

தயவுசெய்து ரயில்வே நிர்வாகம் தொலைந்து போன பேக்கை உடனே கண்டுபிடித்து தர வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த சம்பவம் நடந்து இரண்டு மணி நேரங்களை ஆகிறது. இது குறித்து உடனடியாக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் உள்ள நிலையம் மேலாளர் ஆன ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களிடம் முறையிட்டு கூறினோம். ஆனால் அவர் பயணிகளை கொஞ்சம் கூட மதிக்காமல் அங்குள்ள மக்களின் வட்டார மொழியும் தெரியாமல், தங்களது உடைமைகள் காணாமல் வருத்தத்தில் உள்ளவர்களுக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளார். இப்படி பொறுப்பற்று பணியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...