அதிரையில் கடந்த 5 நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது வாய்க்கால் தெரு பள்ளி அருகே சாலையின் நடுவே செல்லும் வடிகால் சரிந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாய்க்கால் தெரு வழியாக நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்ல நடுதெருவை சுற்றி செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக 12 வது வார்டு கவுன்சிலரிடம் புகார் அளித்தபோது தேர்தல் வரை எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டாராம். அதிரை 3வது வார்டில் வடிகால் பணிகள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் 12 வது வார்டில் தேர்தலை காரணம் காட்டி கடமையை செய்ய கவுன்சிலர் மறுப்பதாக வருந்துகிறார்கள் வாக்களித்த மக்கள்.