குறிப்பாக கால்நடைகளை கண்டுகொள்ளாமல், ரயில் தண்டவாளத்தில் வழியாக செல்கின்றன. இரவு நேரத்தில் தண்டவாளத்தின் மீது அவை படுத்து கிடக்கின்றன. இந்த நிலையில் நேற்று காலை திருவாரூரில் இருந்து வந்த ரயில் அதிரை காந்தி நகர் அருகே சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. என்னவென்று பயணிகள் பார்த்தபோது 2 மாடுகள் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தன. இதற்கு முன் அதிகாலை அவ்வழியாக சென்ற எர்ணாகுளம் ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிரையில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்த 2 மாடுகள்.. ரயில் மோதி விபத்தா?
May 12, 2024
0
அதிரை வழியாக திருவாரூர் - காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதையில் சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் அதிவேக பரிசோதனை நடத்தப்பட்டு வெற்றி பெற்றதை அடுத்து ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டன. அதிரையை சேர்ந்த ஏராளமான மக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயில்கள் இயக்கப்படாத காலத்தில் இருந்ததை போன்றே சிலர் அலட்சியமாக இதை கையாண்டு வருகிறார்கள்.