இந்த நிலையில் நள்ளிரவு அவர் வஃபாத்தானார். அவரது உடல் திருச்சியில் இருந்து அதிரைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. தக்வா பள்ளியில் இரவு 9 மணி அளவில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அதிரை காவல் நிலையம் அருகே சங்கை முகமதுவின் ஜனாஸாவுடன் அதிரை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். காரணம் முஹமதுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பைக் ஸ்டாண்ட் எடுக்காததன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் பைக் ஒன்று மோதுவதை போன்ற காட்சி அமைந்துள்ளது. எனவே காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் தற்பொழுது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.