அதிரை பேருந்து நிலைய கடைகள் உள்வாடகைக்கா? தனியார் வாகனங்கள், ஷெட்களை அகற்றாவிட்டால் போராட்டம் -மஜக எச்சரிக்கை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை பேருந்து நிலைய கடைகளை ஏலம் எடுத்தவர்கள் செட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். 

அந்தப் புகார் மனுவில், "நமதூர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாடகை வேன்கள். டாடா ACE மற்றும் வாடகை கார்களை உடனடியாக அப்புறப்படுத்தி பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அதே போல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஏலத்திற்கு எடுத்தவர்கள் புதிதாக செட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். இதனால் சாலையோர சிறுவியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். கடைகளை எடுத்த நபர்கள் குறிப்பு ECR to பட்டுக்கோட்டை ரோடு முக்கம்) புதிதாக செட்டுகளை அமைத்து அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்து உள்வாடகைக்கு விடுவதாக தகவல்கள் அறிகிறோம். எனவே ஆணையர் அவர்கள் அந்த ஆக்கிரமிப்பு செட்டுகளை அப்புறப்படுத்தி சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்த செட்டுகளை போர்கால அடிப்படையில் அப்புறப்படுத்தவும். அப்புறப்படுத்தவில்லை எனில் மனித நேய ஜனநாயக கட்சி சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிப்போம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே ஆணையர் அவர்கள் இந்த விடயத்தில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை கேட்டுக்கொள்கிறோம்." என்று தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...