சென்னைக்கு செல்லும் அரசு SETC பேருந்து அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதிரை - சென்னை இடையே இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வசதி இல்லாதவர்கள் இந்த SETC பேருந்தில் சென்று வந்தனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் அதிரையில் இருந்து SETC பேருந்து சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களும் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே அதிரை பிறை கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில் சென்னை - அதிரை இடையே நேரடி அரசு AC பேருந்து சேவை கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், இதற்கான முன்பதிவு எப்படி செய்வது என்பது தெரியாமல் அதிரை மக்கள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணித்து வந்தனர். எஸ்இடிசி செயலியில் இந்தப் பேருந்துக்கு டிக்கெட் முன்பதிவுக்கான ஆப்சன் வழங்கப்படாததால் இதை முறையாக பயன்படுத்த முடியாத சூழல் நிலவியது.
இந்த நிலையில் தற்பொழுது எஸ்இடிசி செயலியில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து அதிராம்பட்டினம் வரை வரும் பேருந்தை முன்பதிவு செய்வதற்கான ஆப்சன் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களை செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
செயலியை டவுன்லோட் செய்ய: SETC APP