அதிரை ஆலடி தெருவை சேர்ந்தவர் முஹம்மத் (வயது 27). சங்கை முஹம்மத் என பலராலும் அறியப்பட்ட இவர் ஷிபா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அதிரை பிறையின் செய்தியாளராக இருந்து பல ஆண்டுகள் ஊடக சேவை ஆற்றியுள்ளார். சமூக அக்கறை கொண்ட இளைஞரான முஹம்மத் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நள்ளிரவு அவர் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.