அதிரை திமுக 2ஆக பிரிப்பு.. குணசேகரனை விட அஸ்லம் கட்டுப்பாட்டில் கூடுதல் வார்டுகள் ஒதுக்கிய கட்சித் தலைமை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் கிழக்கு, அதிராம்பட்டினம் மேற்கு ஆகிய நகரங்களில் அடங்கியுள்ள வார்டுகள் மற்றும் நகரக் கழகப் பொறுப்பாளர் - பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து திமுக பொதுச் சயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள
 அறிவிப்பில், "கழக நிர்வாக வசதிக்காகவும் - கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அதிராம் பட்டினம் நகரம், அதிராம்பட்டினம் கிழக்கு, அதிராம்பட்டினம் மேற்கு ஆகிய 2 நகரக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட இவ் வொன்றியங்களில், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரப் பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மேற்சொன்னவாறு பிரிக்கப்பட்ட அதிராம்பட்டி னம் கிழக்கு, அதிராம்பட்டினம் மேற்கு ஆகிய நகரங்கள் பின்வரும் வார்டுகள் கொண்டதாக அமையும்.

அதிராம்பட்டினம் கிழக்கு நகரம் (பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) வார்டுகள் - 3, 4, 5, 14, 15, 16, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய 13 வார்டுகள்

அதிராம்பட்டினம் கிழக்கு நகரம் பொறுப்பாளர்: இராம. குணசேகரன்
34/1, அண்ணா தெரு,
அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டம்.

பொறுப்புக்குழு உறுப்பினர்கள் : 1. எஸ்.பி.கோடி, மாரியம்மன்கோவில் தெரு, 2. இ.சரஸ்வதி. சுப்பிரமணிய கோவில் தெரு, 3. டி.முத்துராமன், பழஞ் செட்டித் தெரு. 4. பி. காதர் இப்ராஹிம், ஆறுமுக்கி டங்கி தெரு, 5. பி.செய்யது முகம்மது, கடற்கரை.

அதிராம்பட்டினம் மேற்கு நகரம் (பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) : வார்டுகள் - 1, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20 ஆகிய 14 வார்டுகள்

அதிராம்பட்டினம் மேற்கு நகரம்
பொறுப்பாளர்: எஸ்.எச். அஸ்லம், 9247, நடுத் தெரு அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டம்.

பொறுப்புக்குழு உறுப்பினர்கள் : 1. என்.ஏ.முகம்மது யூசுப், மேலத் தெரு 2. சி. தில்லைநாதன், முத்தம்மாள் தெரு 3, ஏ.எம்.ஒய் அன்சர்கான், புதுத் தெரு 4. திருமதி எஸ்.ரிபாயா, நடுத் தெரு 5.எம்.சேக்தாவூத், கீழத் தெரு." என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...