அதிரை ECR சாலை பிஸ்மி மெடிக்கல் அருகே கார் - பைக் மோதி மீண்டும் விபத்து

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் இளைஞர்களின் பைக் மோதி ஏராளமானோர் படுகாயம் அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக இருவர் இதனால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அதிரை ஈசிஆர் சாலை மற்றும் சேர்மன்வாடி அருகே விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. 

இந்த வாரம் அதிரை கிழக்கு கடற்கரை சாலை காதிர் முகைதீன் கல்லூரி அருகே இருவர் பைக்கில் நின்று கொண்டு இருந்தபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் இருந்த இருவரும் உயிர் தப்பினர். மறுநாளே  
அதே பகுதியில் இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த நிலையில் சற்றுமுன் அதிரை ECR சாலை பிஸ்மி மெடிக்கல் அருகே இன்று மதியம் கார் - பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ECR சாலையில் சென்றுகொண்டிருந்த காரும் சாலையை கடக்க முயன்ற பைக்கும் மோதிக்கொண்டன. இதன் காரணமாக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் கூடினர். இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...