Ads: Crescent builders - Coming Soon
இது தொடர்பாக அதிரை பிறையில் பலமுறை கட்டுரைகள் எழுதியும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று அதிரை கடற்கரை பணிகளை பார்வையிடுவதற்காக வந்த அமைச்சர் மெய்யநாதன் அதிரை அருகே நகராட்சியால் கொட்டப்படும் குப்பைமேடு பற்றி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, "இயற்கையை நாம் துச்சமாக நினைக்கிறோம். மதிப்பதே இல்லை. வரும்போது கூட பார்த்தேன் அதிராம்பட்டினம் தாண்டி வலது பக்கம் குப்பை எரிந்து கொண்டிருக்கிறது. அடுத்து இரண்டு மூன்று இடங்களிலும் குப்பை தேங்கி கிடக்கிறது. இதற்கென ஒரு பொது இடத்தை பார்த்து மறுசுழற்சி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பை எரியும் போது அதில் இருக்கும் பிளாஸ்டிக் காரணமாக ஏசி காரில் போனாலும் அது நம்மை தாக்குகிறது. வயிற்றை ஏதோ செய்து விடுகிறது. இதை நாம் தடுக்க வேண்டும்." என்றார்.