இந்த வாரம் அதிரை கிழக்கு கடற்கரை சாலை காதிர் முகைதீன் கல்லூரி அருகே இருவர் பைக்கில் நின்று கொண்டு இருந்தபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் இருந்த இருவரும் உயிர் தப்பினர். மறுநாளே
அதே பகுதியில் இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் அதிரை ECR சாலை பிஸ்மி மெடிக்கல் அருகே இன்று மதியம் கார் - பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ECR சாலையில் சென்றுகொண்டிருந்த காரும் சாலையை கடக்க முயன்ற பைக்கும் மோதிக்கொண்டன.
இந்த நிலையில் சற்றுமுன் இரவு இதே பகுதியில் பைக்கும் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் கூடினர். இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.