அதிரை வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் சி 12 நீல பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி அதிரை வழியாக C 12 எண் கொண்ட பேருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து அதிரை பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு முத்துப்பேட்டை சென்று வருகிறது.
இந்த பேருந்து தற்போது நீல நிற புதிய பேருந்தாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த சேவையை இன்று பட்டுகோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.