மறுபக்கம் காங்கிரஸ் கட்சிக்கும் இத்தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் அதிரை முன்னாள் சேர்மனும், திமுக மாவட்ட பொருளாளருமான எஸ்.ஹெச்.அஸ்லம் இன்று சென்னையில் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதிரை அஸ்லம் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல்
March 05, 2024
0
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் இதற்காக ஆயத்தமாகி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றன. மறுபக்கம் திமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்பியும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.