தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளராக மீண்டும் கருப்பு முருகானந்தம் போட்டி

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுடன் 39 தொகுதிகளுக்கான பங்கீடு முடிந்தது. பாமகவுக்கு 10 தொகுதிகள், தமாகா 3, அமமுக 2 மற்றும் புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமமுக, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

 இந்நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைமை வெளியிட்டது. அதன்படி கருப்பு முருகானந்தம் மீண்டும் தஞ்சாவூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட கருப்பு வெறும் 5.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...