Ads: Crescent builders - Coming Soon
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeOf4SaLXygC2h3fdV5Qsh57a_Fx8hXoT_wcYjmjwc8aFyXMEVvOXW0GGVnLjEGnpuhmc3fHS4nFciA-rtZwaQfBBJevM297etEvtj4ZfyTLC03Tm7R2ebU4GElRik76h-lDLCCNlJaHe5bzXvfLyawVcH4SGS3zux-4V4idJNJr8H-7V4yWqhluNXYQY/s16000/New%20Crescent%20builders%20gif.gif)
பிரிக்கப்பட்ட இவ்வொன்றியங்களில், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற நகரப் பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதன்படி அதிராம்பட்டினம் கிழக்கு, மேற்கு ஆகிய நகரங்களின் வார்டு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிராம்பட்டினம் கிழக்கு நகரத்தில் 3, 4, 5, 14, 15, 16, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய 13 வார்டுகள் அறிவிக்கப்பட்டு ராம குணசேகரன் அதிராம்பட்டினம் கிழக்கு நகர பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிராம்பட்டினம் மேற்கு நகரத்தில் 1, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20 ஆகிய 14 வார்டுகள் பிரிக்கப்பட்டு அதிராம்பட்டினம் மேற்கு நகர பொறுப்பாளராக அஸ்லம் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இதன் மூலம் அதிரை திமுக நகர நிர்வாகம் கலைக்கப்பட்டு இருப்பதுடன், பல ஆண்டுகளாக குணசேகரன் வகித்து வந்த நகர செயலாளர் பதவியையும் இழந்து இருக்கிறார். இமாம் ஷாபி விவகாரத்தில் குணசேகரன் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்த நிலையில், திமுக தலைமையின் இந்த அறிவிப்பு அவரது பவரை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது