தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில், "இன்று ரமலான் பிறை பார்க்க வேண்டும். தங்கள் பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட பிறை பார்க்கப்பட்ட தகவல் இருந்தால் நம் சபையின் பிறைக்கான மாநில பிரதிநிதிகளான மௌலவி, K.M. செய்யது அபுதாஹிர் சிராஜி ஹழ்ரத் (9444494628) மௌலவி. M. சையது மஸ்வூது ஜமாலி ஹழ்ரத் 9444119195) ஆகியோரிடம் உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். அவர்கள் தமிழக அரசின் தலைமை காஜி அவர்களுடன் கலந்து பேசுவார்கள்.
மேலும் தலைமை காஜி அவர்களின் இறுதியான முடிவு அனைவருக்கும் தாமதமின்றி தெரிவிக்கப்படும். பிறை விஷயத்தில் குழப்பம் செய்ய நினைப்பவர்களின் வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மாலை அதிரை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மார்க்க அறிஞர்கள் பிறை பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி அதிரையில் சற்றுமுன் ரமலான் தலைப்பிறையை பொதுமக்கள் பார்த்துள்ளனர் இது தொடர்பான புகைப்படத்தை அதிரை பிறை நேயர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை அதிரையில் ரமலான் நோன்பு தொடங்குவதாக பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.