இந்த நிகழ்வில் இந்து மத முறைப்படி மஞ்சள் தடவிய செங்கற்களை வைத்து பூஜை செய்யப்பட்டு அங்கிருந்தவர்கள் கற்களை எடுத்து கொடுத்தனர். அதேபோன்று, இஸ்லாமிய முறைப்படி ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி இமாம் நெய்னா ஆலிம் துஆ ஓதினார்.
அதிரையில் இந்து, இஸ்லாம் மத சடங்குகளுடன் அரசு மருத்துவமனை புதிய கட்டிட அடிக்கல் நாட்டு நிகழ்வு
March 06, 2024
0
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1.5 கோடியில் உருவாக இருக்கும் இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவரின் கணவர் MMS. அப்துல் கரீம், துணைத்தலைவர் இராம.குணசேகரன், நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நியூட்டன், முன்னாள் தலைமை மருத்துவர் ஹாஜா முகைதீன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், 13 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சார்பாக SDPI பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.