அதிரை கடற்கரை ப்ராஜெக்ட்.. உங்கள் பங்களிப்பும் இருக்க விருப்பமா? முழு விபரம்
personEditorial
March 06, 2024
0
share
Ads: Crescent builders - Coming Soon
கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றும் பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரூ.10,000, கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகம் ரூ.10,000, லயன்ஸ் சங்க முன்னோடி பரவாக்கோட்டை T.P.K. ராஜேந்திரன் ரூ.10,000, அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு(SISYA) சார்பில் ரூ.17,000, மேலத்தெருவைச் சேர்ந்த சா.சம்சுல் ரஹ்மான் ரூ. 8,500 வழங்கியுள்ளனர்.
மேற்கண்ட அனைவருக்கும் அதிரை கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பொருளாதார உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்