மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்குவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. மலேசியாவின் மன்னர் அவர்களின் உத்தரவின் பேரில், ஆட்சியாளர்களின் ஒப்புதலுடன் தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு (மார்ச் 10) ரேடியோ டெலிவிஜன் மலேசியா (RTM) இல் நேரலை செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், மலேசியாவில் ரமலானை தொடங்குவதற்கான பிறை பார்க்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது. நாடு முழுவதும் 29 இடங்களில் பிறை பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆனால் பிறை தென்படாததால் செவ்வாய் முதல் ரமலான் என அறிவிக்கப்பட்டுள்ளது.