பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையை அளிக்கும் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டாலும் நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் முஸ்லிம்கள் நேற்று முதல் ரமலான் மாத வழிபாடுகளை தொடங்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கும் நிலையில் அதிரையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று (12-03-2024) இப்தார் முடிந்த பிறகு பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய பாஜக அரசே கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழப்பினர்.