அதிரையில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் இளைஞர்களின் பைக் மோதி ஏராளமானோர் படுகாயம் அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக இருவர் இதனால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அதிரை ஈசிஆர் சாலை மற்றும் சேர்மன்வாடி அருகே விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று சேர்மன்வாடி அருகே அதிவேகமாக சென்ற இளைஞர்களின் பைக் மோதி மூதாட்டி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனைக் கண்டு பதை பதைத்துபோன அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டி காயம் அடைய காரணமான பைக்கில் வந்த இளைஞர்கள் துளிகூட மனசாட்சி இன்றி அங்கிருந்து தப்பி சென்றனர். இதே பகுதியில் கடந்த வாரமும் ஒரு விபத்து ஏற்பட்டது அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவும் இப்பகுதியில் விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.