Ads: Crescent builders - Coming Soon
அதிரை பேருந்து நிலையத்திலிருந்து மெயின் ரோட்டில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். அதேபோல் அரசு மருத்துவமனை செல்லும் சாலையிலிருந்து பழஞ்செட்டித் தெரு பேருந்து நிறுத்தம் வழியாக சாலையை கடக்க ஒருவர் முயன்றுள்ளார். அப்பொழுது அதிவேகமாக வந்த இளைஞரின் பைக் மோதியதில் சாலையை கடக்க முயன்ற நபர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ரத்த காயத்தில் வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிரையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சாலை விபத்துகள் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.