Ads: Crescent builders - Coming Soon
குறிப்பாக ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள், மக்களின் அலட்சியத்தாலோ, விலங்குகள், பறவைகள், காற்றின் காரணமாகவோ சிதறிக்கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தலை தூக்கின. கொசுத்தொல்லை காரணமாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு டெங்கு போன்ற கொடிய நோய் தொற்றுகள் ஏற்பட்டன. இந்த நிலையில் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்கள் அதை அள்ளி செல்லாமல் அங்கேயே எரித்துவிடுகின்றனர். குறிப்பாக சி.எம்.பி. லேன் பகுதியில் இந்த பிரச்சனை அதிகம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
அப்பகுதியை சேர்ந்த நபர் எடுத்து அனுப்பிய விடியோவைதான் தற்போது நிங்கள் பார்த்துகொண்டு உள்ளீர்கள். நகராட்சியில் குப்பை கொட்ட முறையான இடம் இல்லாததால் மக்களின் சுகாதாரம் பற்றி கூட கவலைப்படாமல் இவ்வாறு செய்ய நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.