அதிரையில் ஹராமான அடிக்கல் சடங்கு இன்றி.. வீடு கட்டும் முன் வழிகாட்டிய ஹைதர் அலி ஹஜ்ரத்
personEditorial
March 10, 2024
0
share
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் அண்மையில் நகராட்சி கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு மருத்துவமனை புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் இந்து முறைப்படி அடிக்கல் நாட்டப்பட்டு ஆலடி தெரு முகைதீன் ஜும்மா பள்ளி இமாம் நைனா ஆலிம் அவர்கள் துவா ஓதினார்கள். இது பரவலாக விமர்சனத்திற்கு உள்ளானது. இஸ்லாமிய முறைப்படி அடிக்கல் நிகழ்வு என்ற ஒன்று இல்லாத நிலையில் இது போன்ற நிகழ்வுகளில் கற்களை எடுத்துக் கொடுப்பதும் துவா ஓதுவதும் மார்க்கத்துக்கு முரணானது என உலமாக்களே தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அதிரையில் ஒரு வீட்டின் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இதில் எந்த அடிகற்களும் நாட்டப்படாமல் மௌலவி ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களின் வழிகாட்டுதலின்படி அல்லாஹ்வின் பெயரால் பணிகள் தொடங்கப்பட்டன. மம்பட்டியை எடுத்து பள்ளத்தை வெட்டி ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்கள் பணியை தொடங்கி வைக்க அதை பின்பற்றி மற்றவர்களும் இதே போல் செய்தனர். அப்போது பேசிய ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்கள் இதையும் ஒரு சடங்காக ஆக்கி வட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.