Ad. அதிரை எக்ஸ்பிரஸின் ரமலான் மார்க்க அறிவு போட்டி.. பதில் சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்க!

Editorial
0

இது குறித்து அதில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க அறிவுடன் தங்களது பொதுத்திறனை பரிசோதிக்கும் இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிப்போருக்கு தங்க நாணயங்களும் 3ம் இடம் பெறும் நபருக்கு வீட்டு உபயோக பொருளும் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. மேலும் 30 பேருக்கு சிறப்பு பரிசுகளும் கொடுக்கப்பட இருக்கிறது. 

கடந்த கால போட்டி அனுபவங்கள் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்குட்பட்டு அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் போட்டியாளர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். நிச்சயமாக இந்த போட்டி தங்களது அறிவு பசிக்கு தீணிப்போடும் என நம்புகிறோம்.

போட்டியின் விதிமுறைகள்:

1. www.adiraixpress.com எனும் இணையத்தில் ரமலான் பிறை 01 முதல் பிறை 15 வரை தினந்தோறும் இஸ்லாம்-3, பொது அறிவு-2 என மொத்தம் 5 கேள்விகள் சரியான விடையை தேர்வு செய்க என்கிற முறையில் கேட்கப்படும்.
2. ஒரு தொலைப்பேசி எண்ணில் ஒருவர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டியின் இடையே தொலைப்பேசி எண் அல்லது பிற விபரங்களை மாற்றம் செய்ய கூடாது.
3. ஆண்/பெண் இருபாலரும் போட்டியில் பங்கேற்கலாம்.
4. பெண்கள் தங்களின் கணவரின் பெயரை குறிப்பிடக்கூடாது. தந்தையின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும்.
5. அதிரை, மதுக்கூர், மல்லிப்பட்டினம், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.
6. ரமலான் பிறை 01 முதல் பிறை 15 வரை தினந்தோறும் சஹர் நேரத்தில் அன்றைய போட்டிக்கான வினாக்கள் Google sheet மூலம் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியிடப்படும். அதற்கு இரவு 10:00 மணிக்குள் போட்டியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
7. விதிமுறைகளை மாற்றும் உரிமை தேர்வு குழுவுக்கு உண்டு. அவ்வாறு மாற்றப்படும் விதிமுறைகள் குறித்து அவ்வபோது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியிடப்படும்.
8. போட்டி தொடர்பான சந்தேகங்களுக்கு +91 95510 70008 என்கிற அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் அப் எண்ணை தொடர்புகொள்ளவும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...