Ads: Crescent builders - Coming Soon
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கியவர்களுக்கு தற்பொழுது நேர்காணல் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட திமுகவை சேர்ந்த பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று வேட்பாளர்கள் பெயரை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தஞ்சை தொகுதி வேட்பாளராக முரசொலி நிறுத்தப்பட்டு உள்ளார்.
யார் இந்த முரசொலி?
வயது: 45
கல்வி: B.Sc, L.L.B
தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம்
தாய் - தர்மசமத்தினி
மனைவி - எஸ்.பொற்செல்வி
மகன் - எஸ்.ஆதவன்
பிறந்த நாள்: 26.06.1978
ஊர்: தஞ்சாவூர் திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் பிறந்தார்.
குடும்ப பின்னணி: இவருடைய தாத்தா தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராக இருந்தவர். இவரது தந்தை 1971-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும் தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவர் பதவி வகித்தவர்.
கல்வி விபரம்: இவர் இயற்பியல் இளங்கலை பட்ட படிப்பை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும் , இளங்கலை சட்ட படிப்பை பெங்களூர் ராம் மனோகர் லோகியா சட்ட பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.
பதவிகள்: இவர் 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 வரை தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், 2020 தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு. 2022 ல் நடைபெற்ற தி.மு.க வின் 15 வது அமைப்பு தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.