அதிரை கடற்கரை தெரியுது.. 35 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்து பரவசம்! தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்துக்கு சபாஷ்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) உதவியுடன் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி தொடங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்றி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்ற வேண்டும் என்பது பலரது ஆவலாக இருந்தாலும் அது தொடர்பான போதிய முயற்சிகள் நடைபெறாமல் இருந்தன.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை கைஃபா மற்றும் அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து ஒரு லட்ச ரூபாய் செலவில் கடற்கரை செல்லும் பாதை மற்றும் கடற்கரை அருகே மண்டி இருந்த முட்புதர்களை அகற்றும் பணியை தொடங்கியது. நாலாவது நாளாக இன்று நடைபெற்று வரும் இந்த பணியில் சாலையோரம் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு கடற்கரை அருகே இருந்த புதர்களும் அகற்றப்பட்டு வருகின்றன இதனால் தற்பொழுது அதிரை கடல் சாலையிலிருந்து தென்படத் தொடங்கி இருக்கிறது.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரை கடலை இந்த இடத்திலிருந்து வெறும் கண்களால் காண்பதாக அப்பகுதி மக்கள் நம்மிடம் உற்சாகம் பொங்க தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...