Ads: Crescent builders - Coming Soon

அதில், "தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் அரசு மருத்துவமனை நூற்றாண்டு காலமாக இயங்கி வருகின்றது.இம்மருத்துவமனை மாற்றம் செய்யாமலும் மருத்துவர்கள் அதிகரிக்காமலும், அடிப்படை ஊழியர்கள் இல்லாமலும் சீர்கெட்டு உள்ளது. இம்மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர்களும் பணியாளர்களும் பணியாற்றுவதற்கு, போதிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை பணியமர்த்த கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும், எங்கள் ஊர் ECR ல் அமைந்து உள்ளது. இங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் இங்கு ஏற்படுகின்ற விபத்துகளில், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு சென்றடைவதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகின்றது.
அதிராம்பட்டினம் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்டுள்ள பகுதியாகும். சுற்றுப்புற கிராமங்களில் வாழும் மக்களையும் சேர்த்து 1 இலட்சம் மக்கள் தொகை வாழும் ஊராகும். எனவே, அதிராம்பட்டினம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவும், இரத்த சுத்திகரிப்பு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டியும், அதற்குரிய கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். இம்மருத்துவமனைக்கு முன்னுரிமை கொடுத்து அரசு மருத்துவமனையை மேம்படுத்தி தர வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.