அதிரை ECR சாலையில் பரபரப்பு.. மோடியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
February 16, 2024
0
அதிரை கிழக்கு கடற்கரை சாலை காதிர் முகைதீன் கல்லூரி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை, விவசாயிகளுக்கு எதிரான அரசின் போக்கு, நிர்வாக குளறுபடி போன்றவற்றை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.